மத்திய மாகாணத்தில் உள்ள 03 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நேற்று இரவு 10 மணி முதல் இன்று (06) இரவு 10 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும்.
அதன்படி, பின்வரும் இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டம்: உடுதும்பர
மாத்தளை மாவட்டம்: வில்கமுவ
நுவரெலியா மாவட்டம்: வலப்பனை






