பின்னவல யானைகள் காப்பகம் கடந்த ஆண்டில் 1042 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.
இது 1975 ஆம் ஆண்டு இக்காப்பகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஈட்டப்பட்ட சாதனை மிகு வருமானமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
கடந்த ஆண்டில் பின்னவல யானைகளைப் பார்ப்பதற்காக 193,656 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், 438,364 உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக பின்னவல யானைகள் காப்பகத்தின் பிரதிப் பணிப்பாளர் மிஹிரான் மெதவல தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2025 ஆம் ஆண்டில் இந்த மையத்தினால் 1042 மில்லியன் ரூபாய்க்கும் அதிக வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளது.






