Date:

நுரைச்சோலையின் 2 மின்பிறப்பாக்கிகள் செயலழப்பு

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்தப்பணிகள் காரணமாக தற்போது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பிற்கு 600 மெகாவாட் மின் கொள்ளளவு தற்போது இழக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

லக்விஜய மின்நிலையத்தின் ஒரு மின் உற்பத்தி இயந்திரம் மாத்திரமே தற்போது இயங்கி வருவதுடன், அதன் மூலம் 300 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்பிற்கு இணைக்கப்படுகிறது.

வழமையான பராமரிப்புப் பணி காரணமாக கடந்த நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஒரு இயந்திரம் நிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த 20ஆம் திகதி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மற்றுமொரு இயந்திரத்தையும் செயலிழக்கச் செய்ய வேண்டியேற்பட்டதாக மின்சார சபை சுட்டிக்காட்டியது.

தற்போது அந்த இரண்டு இயந்திரங்களினதும் திருத்தப்பணிகள் இடம்பெற்று வருவதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் வாரத்திற்குள் அவற்றை மீண்டும் மின் உற்பத்திக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நீர் மின் உற்பத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால் அன்றாட மின் விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை…

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை...

நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை (31) கொழும்பு நகருக்கு, வெளி மாகாணங்களில்...

நாவலப்பிட்டியில் குண்டுப்புரளி

நாவலப்பிட்டியில் உள்ள பஸ்பாகே கோரல பிரதேச செயலகத்தின் சேமிப்பு அறை உட்பட,...

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்ற சிறுமி...