Date:

அனர்த்த நிலையால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

குறைந்த எஞ்சின் கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “சாதாரண பொதுமக்கள் கொள்வனவு செய்யும் Alto, Wagon R, Yaris, Hustler போன்ற 1000cc வரம்பிற்குட்பட்ட வாகனங்களுக்கான வரியைக் குறைத்து வழங்குங்கள். 

ஒரு சாதாரண Wagon R வாகனத்திற்கு சுமார் 40 இலட்சம் ரூபாய் வரி விதிக்கப்படுகிறது. 

நடுத்தர வர்க்கத்தினரே இதனை வாங்குகிறார்கள். அத்துடன் இது சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட வாகனம். 

உண்மையில் இவ்வாறான வாகனங்களையே ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.

இதேவேளை, நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான நிபந்தனைகளைத் தளர்த்துமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

“அனர்த்த நிலைமையால் மக்களின் பொருளாதார மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது. 

முன்பதிவு செய்தவர்களால் வாகனங்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

மூன்று மாதங்கள் கடந்தவுடன் 3% அபராதம் விதிக்கப்படுகிறது. 

எனவே, நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, முடிந்தால் இந்த 3% அபராதத்தை நீக்கித் தருமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெடிகுண்டு அச்சுறுத்தல் பீதியை ஏற்படுத்தும்…

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை...

நாட்டில் டிசம்பர் 29 முதல் வானிலையில் பாரிய மாற்றம்

டிசம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் நாட்டின் ஊடாக கிழக்கு திசையிலான...

Breaking முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம்...

வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிக்கை

கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். கண்டி மாவட்ட செயலாளரின் அதிகாரப்பூர்வ...