Date:

சுற்றுலாப் பயணிகளின் வருகை 22.5 லட்சத்தைத் தாண்டியது

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,250,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2,258,202 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தவர்களில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகளாவர்.

அதன்படி, இந்தியாவில் இருந்து 510,133 பேரும், பிரித்தானியாவில் இருந்து 204,703 பேரும்,ஜேர்மனியில் இருந்து 141,941 பேரும் மற்றும் சீனாவில் இருந்து 129,403 பேரும் வருகை தந்துள்ளனர்.

இவர்களுக்கு மேலதிகமாக பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதேவேளை, டிசம்பர் மாதத்தின் முதல் 21 நாட்களில் மட்டும் 154,609 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...