Date:

திடீரென கொழும்பு முழுவதும் குவிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள்

நுகேகொடை – கொஹூவல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து கொழும்பு முழுவதும் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

நேற்று இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 25 வயதுடைய ஒருவர் காயமடைந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பு நகரம் முழுவதும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து முச்சக்கரவண்டியில் தப்பிச் சென்றதாக நம்பப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க நோக்கி சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும்இந்தப் பகுதிகள் வழியாகச் செல்லும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்,...

உச்சம் தொட்ட தங்கம் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை...

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் NPP தோல்வி? No

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திற்குட்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம்...

நவம்பரில் பணவீக்கத்தில் வீழ்ச்சி!

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்...