வெருகல் பிரதேசம் ஞாயிற்றுக்கிழமை (21) காலை முதல் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கத்தொடங்கியுள்ளது.
மன்னம்பிட்டி ஊடாக வௌ்ளிக்கிழமை (19) மாலை முதல் வரத்தொடங்கிய மகாவலி கங்கையின் அதிக நீர் வரத்தினால் தற்போது வெருகல் பிரதேசம் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
பிரதேசத்தின் உள்ளக வீதிகள்,குடியிருப்பு பகுதிகள்,பிரதான வீதி என்பன தற்போது வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளது.






