Date:

கொத்து றொட்டிக்கு சீல்

மன்னார் மூர்வீதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றில் கொத்து தயாரிக்க பயன்படும் மூலப் பொருளான ரொட்டியை  தரமற்ற மக்கும் தன்மை கொண்ட   பேக்கில் (bag) சுருட்டி கொத்து தயாரிப்பதற்குவைக்கப்பட்டிருந்த நிலையில் சுகாதாரத்துறையினரால் கைப்பற்றப்பட்டுஅழிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு தொடர்ச்சியாககிடைக்கப்பெறும் முறைப்பாடுகளைதொடர்ந்து சனிக்கிழமை  (20) அன்று மன்னார்மூர்வீதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அதே நேரம் குறித்த உணவகம் அனுமதியின்றி இயங்கி வந்ததுடன் உணவகத்தில் பணிபுரியும் நபர்கள் சுகாதார அனுமதி கூட பெறாமை கண்டறியப்பட்டது.

அத்துடன் குறித்த உணவகத்தில் அசுத்தமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டமை,அசுத்தமான  முறையில் உணவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை,கழிவு நீர் ஒழுங்காக வெளியேற்றப்படாமை,உணவு தயாரிப்பவர்கள் கையுறை,தலையுறை பயன்படுத்தாமை போன்ற பல்வேறு சுகாதார குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உணவகத்துக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதே நேரம்   எழுத்தூர் பகுதியில் அமைந்திருந்தஒரு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள் காணப்பட்டமை, பொருட்கள் ஒழுங்கான முறையில் சுத்தம் செய்யப்பட்டிருக்காமை,எண்ணெய் வகைகள் ஒழுங்கான முறையில் களஞ்சியப்படுத்தப்படாமை கண்டறியப்பட்ட நிலையில் குறித்த வியாபார நிலையத்திற்குஎதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...