காலியில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக, காலி நகரப் பகுதி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளும் தடைபட்டுள்ளன.
அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருவதுடன், பொதுமக்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






