பாறை ஒன்று சரிந்து வந்ததன் காரணமாக, ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலதோல பின்னலந்த பகுதியில் வசிக்கும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் இன்று (20) காலை அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹல்துமுல்ல மாலதோல பின்னலந்த கிராமத்திற்கு மேலே அமைந்துள்ள மலைத்தொடரில் இருந்த பெரிய பாறை ஒன்று கீழே சரிந்து வந்ததன் காரணமாக, இந்த நபர்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வந்து ஆய்வு செய்யும் வரை தமது வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.






