அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட பாலர் பாடசாலைகள் உள்ளிட்ட முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களில், மீண்டும் பாதுகாப்பாகத் திறக்கக்கூடிய அனைத்து பாலர் பாடசாலைகளையும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.






