Date:

நுவரெலியாவிலிருந்து கொழும்பு சென்ற மரக்கறி மலை!

கொழும்பில் ஏற்பட்ட பெரும் தேவையைத் தொடர்ந்து, நேற்று நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு மொத்தம் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொண்டு செல்லப்பட்டதாக மையத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மொத்த விற்பனையாளர்களிடமிருந்து நிலையான தேவையை பிரதிபலிக்கும் வகையில், கடந்த 8ஆம் திகதியன்று மேலும் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நுவரெலிய பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலையை பொறுத்தவரையில், முட்டைக்கோவா- 150 ரூபாயாகவும், கரட்- 190, லீக்ஸ் 190, நோல்கோல் 280, முள்ளங்கி 160, பீட்ரூட் – 230, நறுக்கிய பீட்ரூட்280, உருளைக்கிழங்கு 260, மற்றும் சிவப்பு உருளைக்கிழங்கு 280 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதேவேளை இந்தக் காலகட்டத்தில் மரக்கறிகளுக்கான ஒட்டுமொத்த சந்தை தேவையை விட மரக்கறிகளின் வரவு குறைவாகவே உள்ளது என்றும் நுவரெலிய பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன...

வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது -ஜனாதிபதி

எங்களுக்கு வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது என எரிபொருள்...

பகல் நேரத்தில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில்...