தற்போதைய அனர்த்த நிலையைக் கருத்திற் கொண்டு சில அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், பொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறையும் இரத்து செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.






