Date:

04 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரல, தும்பனே, மெததும்பர, அக்குரணை, குண்டசாலை, உடுநுவர, தொலுவ, உடுதும்பர, பாதஹேவாஹெட்ட, ஹாரிஸ்பத்துவ, மினிபே, கங்கவட்ட கோரலய, பஸ்பாகே கோரலய, பன்வில, ஹதரலியத்த, யட்டிநுவர, பாததும்பர, தெல்தொட்ட, பூஜாப்பிட்டிய மற்றும் உடபலாத ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கேகாலை மாவட்டத்தின் வரகாபொல, அரநாயக்க, கலிகமுவ, ரம்புக்கன, புளத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை, மாவனெல்லை மற்றும் கேகாலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, நாரம்மல, பொல்கஹவெல, மல்லவப்பிட்டிய, அலவ்வ மற்றும் மாவத்தகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் யட்டவத்த, மாத்தளை, அம்பன்கங்க கோரலய, பல்லேபொல, லக்கல பல்லேகம, ரத்தோட்டை, நாவுல, உக்குவளை மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை மட்டம் 2 அறிவித்தல் 

பதுளை மாவட்டம் – ஊவா பரணகம, பண்டாரவளை, சொரணத்தோட்டை, ஹாலிஎல, மீகஹகிவுல, பதுளை, கந்தகெட்டிய, எல்ல, லுணுகல, வெலிமடை, ஹப்புத்தளை, ஹல்துமுல்ல மற்றும் பசறை.

கேகாலை மாவட்டம் – தெரணியகலை, தெஹியோவிட்ட மற்றும் ருவன்வெல்ல. 

நுவரெலியா மாவட்டம் – கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, ஹங்குரான்கெத, மத்துரட்ட, அம்பகமுவ, நோர்வுட், வலப்பனை, நில்தண்டஹின்ன, தலவாக்கலை மற்றும் நுவரெலியா. 

எச்சரிக்கை மட்டம் 1 அறிவித்தல் 

கொழும்பு மாவட்டம் – சீதாவக்க, பாதுக்கை. 

கம்பஹா மாவட்டம் – அத்தனகல்ல, மீரிகம, திவுலப்பிட்டிய. 

களுத்துறை மாவட்டம் – ஹொரணை, புளத்சிங்கள, இங்கிரிய. 

இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி, நிவித்திலை, கலவான, கொடகவெல, எஹலியகொட, கிரியெல்ல, கொலன்ன, பலாங்கொடை, கஹவத்தை, இம்புல்பே, ஓப்பநாயக்க, பெல்மதுளை, அயகம, குருவிட்ட, எலபாத.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24)...

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...

ஜொலிக்கப் போகும் ராகம நகரம்..!

ராகம நகரத்தை மையமாகக் கொண்டு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை...

அனுஷ பெல்பிட்ட கைது!

முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும்...