Date:

அனர்த்தத்தில் பலியானோருக்கு இறப்புச் சான்றிதழ்

நாட்டை சூறையாடிய டிட்வா புயல், மண்சரிவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில்  உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கண்டி, நுவரெலியா, பதுளை, குருநாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா மற்றும் களுத்துறை ஆகிய நிர்வாக மாவட்டங்களிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டது.

மேற்கூறிய மாவட்டங்களில் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்கும் நோக்கத்திற்காக, 2010ஆம் ஆண்டு 19ஆம் எண் இறப்பு பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி 11இன் பிரிவு 9 இன் விதிகளின்படி, 2025 நவம்பரில் ‘டிட்வா’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ‘தேசிய பேரிடர் பகுதிகள்’ என்று அறிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வரலாற்று இரட்டை வெற்றியை வென்ற இலங்கை விமானப்படை!

83வது தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்...

வெலிசரையில் புதிய சிறைச்சாலை!

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைத்துக் கொள்வதற்கு வெலிசறை பகுதியில் புதிய சிறைச்சாலையை...

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24)...

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...