இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பரவலான அழிவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட புடின், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், இந்த கடினமான நேரத்தில் இலங்கையுடன் ரஷ்யாவின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.






