இன்று ஜனாதிபதி மற்றும் மாகான ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெல்தோட்டை பற்றி பேசப்பட்டது. அவசரமாக உலர் உணவுப் பொருட்களை வான்வழி (ஹெலிகொப்டர்) மூலம் தெல்தோட்டைக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன் சேதமடைந்துள்ள உள்ளூர் பாதைகளை மிக அவசரமாக திருத்தியமைக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். மாகாண பாதைகளை திருத்தியமைக்க 2000 மில்லியன் ரூபாய்களை உடனடியாக விடுவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஹன்தான-தெல்தோட்டை பாதை பற்றியும் இங்கு விஷேடமாக பேசப்பட்டது.






