இலங்கையின் விவசாய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
உலக வங்கியின் தெற்காசியாவுக்கான உப தலைவர் ஹார்ட்விக் ஷாப்பர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இன்று (03) இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதன்போது, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள 16 மில்லியன் மக்கள் பயனடையவுள்ளனர்.
இதன்மூலம், இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்திற்கு உறுதுணையளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.