தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக ரயில் சேவைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அத்தியாவசிய சேவைகளுக்காக வருகை தருபவர்களுக்காக மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய அனர்த்த நிலைமை நீங்கும் வரை மேல் மாகாணத்திற்குள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்றும், அத்தியாவசிய சேவைகளுக்காக வருகை தரும் பணியாளர்களுக்காக காலி மற்றும் சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை ஒரு சில ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய தெரிவித்துள்ளார்






