CEB யின் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பு மையத்தின்படி, ரந்தம்பே மற்றும் மஹியங்கனை இடையேயான மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட பழுதினால் தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
குறிப்பாக மஹியங்கனை பிரதேசத்திலும் இந்த மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது. இதனை சீர் செய்வதற்கான நேரம் இதுவரைக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சீரமைப்பு செய்வதற்கான வேலைகளை இலங்கை மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.






