கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பொருளியல் விஞ்ஞான வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) புகார் அளிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், மேற்படி விவகாரம் தொடர்பில் பதிலளித்த அவர், வினாத்தாள் கசிந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவு ( CID) அது குறித்து விசாரணை மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.
இதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.






