உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, ஒப்பிடுகையில், இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இன்றைய (25) ஆம் திகதிய நிலவரப்படி, உலக தங்கத்தின் விலை 4,150 டொலராக அதிகரித்துள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை திங்கட்கிழமை (24) விலையுடன் ஒப்பிடும்போது செவ்வாய்க்கிழமை(25) நிலவரப்படி ரூ.6,000 அதிகரித்துள்ளது என்று சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.309,200 ஆக இருந்தது.
திங்கட்கிழமை (24) அன்று ரூ.303,600 என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையில், திங்கட்கிழமை (24) அன்று ரூ.330,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை(25) ரூ.336,000 ஆக அதிகரித்துள்ளது






