க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சில வினாத்தாள்கள் கசிந்துள்ளதா என்பதை உறுதி செய்ய விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில் உள்ள 27 கேள்விகளும் உயர்தர பொருளாதார வினாத்தாளில் உள்ள 27 கேள்விகளும் ஒரே மாதிரியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.






