Date:

பலத்த மழையால் 09 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்டிய மஹா ஓயா பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிரிஉல்ல, பொல்கஹவெல மற்றும் படல்கம போன்ற இடங்களில் 100 மி.மீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் ஆற்றுப் படுகைகளில், நில்வலா கங்கையின் கீழ் ஆற்று படகையில் 50 மில்லி மீற்றரும் கிங் கங்கை, களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா, யான் ஓயா, தெதுறு ஓயா மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களுக்கு அண்டிய பகுதிகளில் 50-75 மி.மீற்றர் வரையான குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சியும் கிடைத்துள்ளது.

இதற்கமைய, பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வான நிலையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நில்வளா, கிங் மற்றும் களு கங்கையை அண்டிய குடா கங்கை, அத்தனகலு ஓயா, மஹா ஓயா மற்றும் தெதுறு ஓயா ஆகியவற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளில் அடுத்த சில நாட்களிலும் மழை பெய்யக்கூடும் என பொறியியலாளர் எல்.எஸ்.சூரிய பண்டார தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாகவே ஈர வலயத்தை அண்டிய பல ஆற்றுப் படுக்கைகளில் நீர்மட்டம் உயர்வாகக் காணப்படுவதால், தற்போது பெய்யும் சாதாரண மழையுடனேயே அப்பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 பிரதான நீர்த்தேங்களில் ஒன்பதில் தற்போது வான் பாய்ந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனி அன்பளிப்பு!

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

காவல்துறை பாதுகாப்புடன் டெல்லி செல்லும் தளபதி விஜய்!

இந்தியாவின், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு விசாரணைக்காக...

மூடப்பட்ட அறுகம்பை இஸ்ரேலர்களின் சபாத் இல்லம்!

பொத்துவில் அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக...

பொங்கல் தினத்தில் ஜனாதிபதி வடமாகாணம் பயணம்

தைப்பொங்கல் தினமான, 15ஆம் திகதி, வடமாகாணத்துக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...