Date:

அமேசன் கல்லூரிக்கு மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் திடீர் விஜயம் (clicks)

அமேசன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டு அதனை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில், ஜனாதிபதி அவர்களின் திடீர் அறிவுறுத்தல்களுக்கு அமைவக வெளிநாடு செல்ல நேரிட்டுள்ளமையினால் மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாததற்கான மன வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்ள மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் நேற்று அமேசன் கல்லூரிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.

ஆளுநர் அவர்களின் இந்த அசாதாரணமான வருகை கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடையே ஒரு பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

விஜயத்தின் போது ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள்,
“கல்லூரி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ள முடியாதது எனக்குப் பெரும் வருத்தமாக இருந்தது. அதைத் தெரிவித்துக்கொள்ளவே இன்று தனிப்பட்ட முறையில் வந்துள்ளேன்,”
என்றார்.

அவரது இந்த எளிமை மற்றும் பொறுப்புணர்வு, கல்வி சமூகத்தில் உயர்ந்த வரவேற்பைப் பெற்றதுடன், மாணவர்களுக்கு முன்மாதிரியாகும் செயல் எனவும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

கல்லூரி நிர்வாகம், ஆளுநர் அவர்களின் வருகை தங்களுக்கு பெருமையளிப்பதாக இருந்தது என்றும், இது கல்வியைக் கருத்தில் கொள்ளும் தலைமைத்துவத்தின் சிறந்த உதாரணம் என்றும் தெரிவித்தது.

ஆளுநர் அவர்கள் அமேசன் கல்லூரி முகமைத்துவ பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் உள்ளிட்ட அலுவலர்களுடன் உரையாடி, அவர்கள் எதிர்கால நோக்கங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

அமேசன் கல்லூரியின் கல்வி செயற்பாடு பராட்டுக்குறியது என்றும் இப்பயனமும், பாட்டமளிப்பு விழா வெற்றிபெறவும் தமது மணப்பூர்வமான வாழ்த்துக்களை இதன் போது தெரிவித்த ஆளுநர், எதிர்கால சமூகத்துக்கு இன்னும் உயர் கற்றல் சந்தர்ப்பங்களை கல்லூரி உருவாக்கி கொடுக்க வாழ்த்துவதாகவும் கூறினார் ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள்.

ஆளுநரின் வருகையினை நினைவு கூறும் வகையில் அமேசன் கல்லூரி முகமைத்துவ பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் அவர்களி னாள் நினைவு சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு எதிராக அதிக்குற்றச்சாட்டு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது

இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்டிய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும்...

”தாதியர் சீருடையில் மாற்றம் இல்லை”

தாதியர் அதிகாரிகளின் சீருடையை மாற்றுவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று...

நுகேகொட பேரணிக்கு திலித்திற்கு அழைப்பு

எதிர்க்கட்சிகளின் ஒரு பகுதியினர் இணைந்து எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவுள்ள...