கட்டாய பௌதீக ஆய்வு இன்றி 323 கொள்கலன்களை விடுவித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவினால் இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.






