முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசேட விசாரணைக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.






