இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
காய்ச்சல் காரணமாக இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக குசல் மெந்திஸ் இன்றைய போட்டியில் தலைவராகக் கடமையாற்றுவார்.
மேலும், வனிந்து ஹசரங்க காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர் பவன் ரத்நாயக்க இன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது






