Date:

இலங்கையில் பாலியல் தொழிலாளர்களுக்கு புதிய அமைப்பு

இலங்கையில் உள்ள பெண் பாலியல் தொழிலாளர்கள், அதிலிருந்து விடுபட்டு சுயதொழில் வாய்ப்புகளை மேற்கொள்ள பிரஜாசக்தி சன்வர்தன பதனம (சமூக அதிகாரமளிப்பு அறக்கட்டளை) எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு, பாலியல் தொழிலாளர்களின் கைதுகள், சமூக பாகுபாடு மற்றும் பிறருக்கு அரசாங்க நலத்திட்ட சலுகைகளை எதிர்கொள்வதை கொண்டு உருவாக்கப்பட்டதாக அதன் நிறைவேற்று இயக்குநர் எச். ஏ. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

மேலும், இது மிகப்பெரிய பாலியல் தொழிலாளர்களின் அமைப்பு .

சுமார் 10,000 பெண் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் சட்ட மற்றும் சமூக அங்கீகாரத்திற்காக ஒரு பொதுவான பதாகையின் கீழ் தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளனர்.

கொழும்பு, குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் இதில் இணைந்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி, விவாகரத்து, பாலியல் வன்கொடுமை, கடத்தலுக்கு ஆளாகுதல் போன்ற காரணங்களால் பெண்கள் இந்த பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சில பெண்கள் தங்கள் துணைவரின் ஒத்துழைப்புடன் இந்த தொழிலில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில பெண்கள் போதைக்கு அடிமையானதால், அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சவாலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெண்கள் இந்த பாலியல் தொழிலிருந்து விடுபட்டு சுயதொழில் வாய்ப்புகளை மேற்கொள்ள இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க புதிய நடைமுறை

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக டிஜிட்டல் அட்டை (Digital...

சம்பா மற்றும் கீரிசம்பா நெல்லுக்கான விலை அதிகரிப்பு

உள்நாட்டு நெற்செய்கையை ஊக்குவிக்கும் வகையில், சம்பா மற்றும் கீரிசம்பா நெல்லுக்கான அரசாங்கத்தின்...

Breaking News விமலின் சத்தியாகிரகம் நிறைவு

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை...

ஓராண்டு காலம் தாமதமாகும் ஆறாம் தர கல்விச் சீர்திருத்தம்!

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு...