புத்தளம் மாநகர சபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அருவக்காலு தின்மக்கழிவு செயற்திட்டத்திற்கு (Sanitary Landfill) எதிராக தீர்மானம் ஒன்றை ஒருமித்த ஆதரவுடன் சபை உறுப்பினர்கள் நிறைவேற்றினார்கள்.

இந்த தீர்மானம் ரனீஸ் பதுர்தீன் அவர்களால் முன்வைக்கப்பட்டு, நகரசபையின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Clean Puttalam போராட்டத்தை முதலில் ஆரபித்த தலைவர் இஷாம் மரிக்கார், முன்னணி செயற்பாட்டாளர்களான இப்லால் அமீன், சித்தி சலீமா மற்றும் முகமது ஷிபாக் ஆகியோர் தற்போது இந்த நகரசபையின் உறுப்பினர்களாக இருந்துவருவதோடு, தங்கள் அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி மக்களின் உரிமைக்காக ஒருமித்த போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிபிடத்தக்கது.

இந்த மாநகர சபைக்கு தலைமை வகித்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரின்ஷாத் அவர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தந்தாலும், விஞ்ஞானரீதியாக இந்த திட்டத்தில் பாதிப்பு இல்லை என்றால் அவற்றை நாம் நிருத்தமுடியாது என்பதையும் சபையில் குறிப்பிட்டார்.






