TikTok, தனது பாவனையாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் படைப்பு திறனுக்கான ஆதரவை மேம்படுத்தும் நவீன அம்சங்களின் தொகுப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களைக் கொண்ட இந்த தளம், படைப்பாற்றல் வெளிப்பாடு, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு இடையே சமநிலை பேணுவதற்கு நிரந்தரமாக பணியாற்றி வருகிறது. இந்த நோக்கத்திற்காக, குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்கள் உள்ளிட்ட பரந்த சமூகத்தை குறிவைத்து, மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, புதிய அம்சங்கள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு இன்று, குடும்ப உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, TikTok பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பவர்களின் கணக்குகளுடன் இளைஞர்களின் கணக்குகளை இணைக்க அனுமதிக்கும் சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் திறனையும், தொடர்ச்சியான உரையாடல்களை ஊக்குவிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.






