அக்டோபர் 29 ஆம் திகதி,Amazon College இயக்குநர் அவர்கள் , Sri Lanka ஐ பிரதிநிதித்துவப்படுத்தி, கனடாவிற்கான அதிகாரப்பூர்வ குழுவின் ஒரு உறுப்பினராக பங்கேற்றார்.
இந்த பயணத்தின் போது, குழுவினர் Montreal, Quebec, Toronto, Saskatchewan, Regina, மற்றும் Vancouver நகரங்களில் நடைபெற்ற பல மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளில் பங்கேற்று, கல்வி மற்றும் வணிக துறைகளில் புதிய ஒத்துழைப்புகளை உருவாக்கினர்.
இயக்குநர் அவர்கள் Canada Bureau for International Education (CBIE) Expo நிகழ்வில் பங்கேற்று, பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் கல்வி வாய்ப்புகள், உதவித்தொகைகள் மற்றும் மாணவர் பரிமாற்ற திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.
Saskatchewan மற்றும் Regina பல்கலைக்கழகங்களுக்கான விஜயங்களின்போது, கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இலங்கை மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை திறந்தார்.
Montreal மற்றும் Toronto வில், இலங்கை வணிகர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களைச் சந்தித்து, இலங்கையில் முதலீடு செய்வதற்கும் சுற்றுலா மற்றும் வணிக வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் ஊக்கமளித்தார்.
இந்த சிறப்பான பயணத்தை ஒருங்கிணைத்த Ceylon Chamber of Commerce, Sri Lanka–Canada Business Council மற்றும் Canada–Sri Lanka Business Convention அமைப்புகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!
🌎 கனடா நாடானது முன்னேற்றமும் அற்புதமான மக்களும் கொண்ட ஒரு சிறந்த நாடாகும்.
q






