துருக்கி இராணுவத்துக்கு சொந்தமான சி–130 ரக சரக்கு விமானம் நேற்று அசர்பைஜானில் இருந்து புறப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது. துருக்கி நோக்கி வந்துகொண்டிருந்த இராணுவ விமானத்தில் 20 பேர் பயணித்திருந்தனர்.
இந்நிலையில், ஜோர்ஜியா நாட்டின் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்தபோது, விமானி கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளாகி, வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 20 பேரும் உயிரிழந்தனர்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விபத்துக்கான துல்லியமான காரணத்தை கண்டறிய துருக்கி மற்றும் ஜோர்ஜியா இராணுவ அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






