கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் திருடுப் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாக வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் திருடிச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸாருக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் மாத்திரம் மேல் மாகாணத்தில் 10 மோட்டார் சைக்கிள்களும் 3 முச்சக்கர வண்டிகளும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.






