அமெரிக்க அரசாங்க நிதி முடக்கத்தின் காரணமாக, எப்.ஏ.ஏ எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி, 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க பாராளுமன்றில் நிதி சட்டமூலத்திற்கு அனுமதி கிடைக்காத காரணத்தால், அரச துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல், அன்றாட பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க விமான போக்குவரத்தும் பாரிய இடையூறுகளை சந்தித்து வருகிறது.
அதன்படி வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக 1400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது






