Date:

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சஜித் சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருமான அஜித் தோவலை நேற்று (07) புதுடில்லியில் சந்தித்தார்.

கடல்சார் இணைப்பு, திறன் மேம்பாடு மற்றும் நவீன மேம்பட்ட தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, தெற்காசிய நாடுகளிடையே பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து இதன்போது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.

தகவல் பரிமாற்றம், பிராந்திய மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பரஸ்பர வளர்ச்சிக்கான இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் இங்கு வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...