ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (02) எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்றே தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடம்புரண்ட ரயிலை மீண்டும் தடம் ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.






