Date:

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் திரு. லசந்த விக்ரமசேகரவின் இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (26) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அன்னாரது இந்த கொலை தொடர்பில் பாக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். கொலை கலாச்சாரம் சமூகத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மக்கள் வாக்குகளால்.  தேர்ந்தெடுக்கப்பட்ட, சபைக்கு தெரிவான ஏனைய உறுப்பினர்களால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஒருவரை இவ்வாறு படுகொலை செய்வது, நாட்டில் கொலைக் கலாச்சாரத்தின் மற்றொரு அங்கமாகும். இன்று நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை, காட்டுச் சட்டம் மட்டுமே காணப்படுகின்றது. இதன் காரணமாக, குடிமக்களின் வாழ்க்கை சீரழிந்துபோயுள்ளது. இந்த கொலை கலாச்சாரத்தை நாம் இல்லாதொழிக்க வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, சமூகம் பல்வேறு பிரிவினரின் பிடியில் சிக்கிப்போயுள்ளது. இது மக்களின் வாழும் உரிமை மீது விழுந்த அடியாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களின் வாழும் உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும், ஆகையால் இந்தக் கொலைகாரர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அவரது கொலை குறித்து பக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.
தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக குறிப்பிட்டு பிரமாணப் பத்திரம் மூலம் பொலிஸ்மா அதிபரிடம் அவர் பாதுகாப்பு கோரிய போதிலும், உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதுகாப்பு வழங்காமை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...

சீரற்ற காலநிலையால் 29000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...