காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன் களனி, அத்தனகலு, கிங், பென்தர ஆறுகளை அண்மித்த பகுதிகளிலும் 50 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த மழைவீழ்ச்சியால் களுகங்கையை அண்டிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் இரத்தினபுரி, மில்லகந்த, எல்லகாவ பிரதேசங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
எதிர்காலத்தில் இந்த நீர் மட்டம் அதிகரித்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் களு கங்கையை அண்மித்த குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.






