முஸ்லிம் சிவில் அமைப்பினருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் தாதியர்கள் தமது கலாச்சாரம் மற்றும் மத மரபுகளைப் பேணும் வகையில் உடைகளை அணிவதில் எதிர்நோக்கும் சவால்கள், கொவிட்-19 காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் காரணமாக, தொடர்ந்தும் ஜனாசாக்களை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமம் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முஸ்லிம் தாதியர்கள் தமது கடமைகளை நிறைவேற்றும் போது, நடைமுறையில் உள்ள சட்டத்துக்குள் தமது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆடைகளை அணிவதில் எந்தவித சட்டத் தடை இல்லையென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஜனாஸாக்கள் தொடர்பில் கொவிட் -19 காலத்துக்கு முன்பிருந்த விதிமுறைகள் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத தெரிவித்துள்ளார்.






