2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இன்று (24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர்-அதிபர்கள் சங்கங்கள், நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாடசாலை தவணை ஆரம்பித்தவுடன் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.






