இலங்கையில் தங்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றது. அந்த வகையில் இன்று இரண்டு தடவைகள் தக்கம் விலை குறைந்துள்ளது.
இன்று நண்பகல் வரை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் குறைந்து விற்பனையாகி வந்த நிலையில், பிற்பகலின் பின்பு மீண்டும் தங்க விலை 5,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று மதியம் நண்பகல் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 335,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாயாக விற்பனையாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் நிலவும் தங்க விலைக்கு ஏற்ப, பாரிய வேறுபாடின்றி இலங்கையிலும் தங்க விலை நிர்ணயிக்கப்படும் என அகில இலங்கை நகை விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது