தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அறிவிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த தொலைபேசி இலக்கம் – 0774506602
சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்கள் எந்த நேரத்திலும் மேற்கண்ட எண்ணை அழைக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.