பொலிஸாரால் கைது செய்வதற்காக தேடப்பட்டு வருவதாக கூறப்படும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, இன்று (15) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தயாராக இருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி குணரத்ன வன்னிநாயக்க தாக்கல் செய்த ரிட் மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, வன்னிநாயக்க சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஃபைஸ் முஸ்தபா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய, தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி மனுதாரரின் சட்டத்தரணியால் கோரும் இடைக்கால கோரிக்கையை தனது நீதிமன்றத்தால் ஏற்க முடியாது என்று கூறினார்.
மனுதாரரின் சட்டத்தரணி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது பொருத்தமானது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
பின்னர், இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விசாரிக்க இந்த மனுவை நாளை (16) பிற்பகல் 1.30 மணிக்கு விசாரணைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு திகதியிட்டது