ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இந்த பிணை உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மக்கள் கலவரத்தின்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் அரசியல் அலுவலகம் அழிக்கப்பட்டதற்காக, இழப்பீடாக 8.85 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில், சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.