Date:

ஜப்​பானின் முதல் பெண் பிரதம​ர் சனே டகைச்சி?

ஜப்​பானின் முதல் பெண் பிரதம​ராக சனே டகைச்சி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ஜப்​பான் நாட்​டில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்​டிபி) ஆட்​சி​யில் உள்​ளது. இக்​கட்​சி​யின் தலை​வர் மற்​றும் ஜப்​பான் பிரதமர் ஷிகெரு இஷி​பா, ஓராண்​டுக்​குப் பிறகு பதவி வில​கு​வ​தாக ஏற்​கெனவே அறி​வித்​திருந்​தார்.

இதற்​கிடை​யில், ஜப்​பான் பாராளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்​பான்மை இழந்​தது. இதனால் பிரதமர் பதவியை ஷிகெரு கடந்த மாதம் இராஜி​னாமா செய்​தார்.

அதனால், ஆளும் லிபரல் டெமாக்​ரடிக் கட்​சி​யின் புதிய தலை​வரை தேர்ந்​தெடுப்​ப​தற்​கான தேர்​தல் நேற்று டோக்​கியோ​வில் நடை​பெற்​றது. இதில் முன்​னாள் பொருளா​தார பாது​காப்பு அமைச்​சர் சனே டகைச்சி (64), வேளாண் அமைச்​சர் ஷிஞ்​சிரோ கொய்​சுமி ஆகியோர் போட்​டி​யிட்​டனர்.

முதல் கட்​ட​மாக கட்​சிக்​குள் நடை​பெற்ற வாக்​கெடுப்​பில் சனே டகைச்சி வெற்றி பெற்​றார்.

உட்​கட்சி தேர்​தலில் சனே 183 வாக்​கு​களும் கொய்​சுமி 164 வாக்​கு​களும் பெற்​றனர். இதையடுத்து, லிபரல் ஜனநாயகக் கட்​சித் தலை​வ​ராக சனே டகைச்சி சனிக்கிழமை (04) அன்று அதி​காரப்​பூர்​வ​மாக பொறுப்​பேற்று கொண்​டார். அவர் ஜப்​பான் நாட்​டின் முதல் பெண் பிரதம​ராகப​தவி​யேற்​பார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பிரதம​ராக பதவி​யேற்ற பிறகு பாராளு​மன்​றத்​தில் டகைச்சி பெரும்​பான்​மையை நிரூபிக்க வேண்​டும். ஆனால், லிபரல் ஜனநாயகக் கட்​சிக்கு பெரும்​பான்மை இல்​லை. அதே​நேரத்​தில், நிதி முறை​கேடு​கள் தொடர்​பாக வாக்​காளர்​களும் அதிருப்​தி​யில் உள்​ளனர். இது​போன்ற சவால்​கள் இருந்​தா​லும், நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் டகைச்சி வெற்றி பெறு​வார் என்று கூறுகின்​றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மைத்திரி வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது...

டில்வினை சந்தித்தார் பிரான்ஸ் தூதுவர்

பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் (Rémi Lambert)அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின்...

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றவர்கள்

ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ்...

இஸ்ரேல் பாராளுமன்றில் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பாராளுமன்றமான க்னெசெட் (Knesset) அமர்வில்...