Date:

அணித் தலைவரை தூக்கியது இந்தியா

ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான ஒரு நாள் கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​கும் இந்​திய அணிக்கு ஷுப்​மன் கில் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். கேப்​டன் பதவியி​லிருந்து ரோஹித் சர்மா விடுவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், அவர் அணி​யில் தொடர்​கிறார்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான டெஸ்ட் தொடரில் இந்​திய அணி தற்​போது விளை​யாடி வரு​கிறது. இந்த தொடர் முடிந்​தவுடன் இந்​திய அணி ஆஸ்​திரேலியா சென்​று, அந்த அணிக்கு எதி​ராக 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் தொடர், 5 போட்​டிகள் கொண்ட சர்​வ​தேச டி20 தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடர் வரும் 19-ம் திகதி தொடங்​கு​கிறது. இந்​தத் தொடருக்​கான இந்​திய அணியை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம்​(பிசிசிஐ) நேற்று தேர்வு செய்து அறி​வித்​துள்​ளது.

இது​நாள் வரை இந்​திய அணி​யின் கேப்​ட​னாக செயல்​பட்டு வந்த ரோஹித் சர்​மா, பதவியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​டுள்​ளார். புதிய கேப்​ட​னாக ஷுப்​மன் கில்​லும், துணை கேப்​ட​னாக ஸ்ரே​யாஸ் ஐயரும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதே​நேரத்​தில் அணி​யில் ரோஹித் சர்​மா, விராட் கோலி இடம் பெற்​றுள்​ளனர்.

அதே​போல் டி20 போட்​டிகளுக்​கான இந்​திய அணிக்கு சூர்​யகு​மார் யாதவ் கேப்​ட​னாக​வும், ஷுப்​மன் கில் துணை கேப்​ட​னாக​வும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

ஒரு​நாள் தொடருக்​கான இந்​திய அணி விவரம்: ஷுப்​மன் கில் (கேப்​டன்), ரோஹித் சர்​மா, விராட் கோலி, ஸ்ரே​யாஸ் ஐயர், அக்​சர் படேல், கே.எல்.ராகுல் (விக்​கெட் கீப்​பர்), துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், நித்​திஷ் ரெட்​டி, வாஷிங்​டன் சுந்​தர், குல்​தீப் யாதவ், ஹர்​ஷித் ராணா, முகமது சிராஜ், அர்​ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போலி செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

“சிறையில் இம்ரான் உயிரோடு இருக்கிறார்”

​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை...

வீடுகளைச் சுத்தம் செய்ய வீட்டுக்கு 10,000;விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு, ஒரு வீட்டுக்கு 10,000 வழங்கப்படும்....