கொங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுக்கு தேசத்துரோகக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொகாங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள இராணுவ நீதிமன்றம் ஜனாதிபதியை தேசத்துரோகம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
தலைநகர் கின்ஷாசாவில் உள்ள உயர் இராணுவ நீதிமன்றம், கபிலா தேசத்துரோகம், போர்க்குற்றங்கள், சதித்திட்டம் மற்றும் ருவாண்டா ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சிக் குழுவுடன் சேர்ந்து கிளர்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக குற்றவாளி என அடையாளம் கண்டு தீர்ப்பளித்துள்ளது.
மேலும், கபிலா காங்கோவிற்கு 29 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும், வடக்கு கிவு மாகாணத்திற்கு 2 பில்லியன் டொலர் மற்றும் தெற்கு கிவுவிற்கு 2 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.