Date:

சட்டவிரோத ஜோதிட நிலையம் – இந்திய பிரஜைகள் மூவர் கைது

பருத்தித்துறை, தும்பளை வீதியில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கிய மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்தனர்.

இந்த ஜோதிட நிலையத்தை இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த மூவர் நடத்தி வந்தனர்.

இந்த விடயம் தொடர்பாக தும்பளை பிரதேச கிராம அலுவலர், பருத்தித்துறை நகரசபைத் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனையடுத்து, நேற்று பருத்தித்துறை நகரபிதா நேரில் சென்று பரிசோதித்து, குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினார்.

எனினும், இன்று (30) ஜோதிட நிலையம் தொடர்ந்து இயங்கியதை அடுத்து, நகரபிதா வின்சன் டி. டக்ளஸ், பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இந்தியப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்தபோது, அவர்கள் மூவரும் சுற்றுலா வீசாவுடன் நாட்டிற்குள் வந்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கிய மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முஸ்லிம் தாதியர் ஆடை விவகாரம்

முஸ்லிம் சிவில் அமைப்பினருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல்...

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்

பஹ்ரைனில் நடைபெற்ற 3 ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில், இலங்கையின்...

பாதாள அரசியல்வாதிகள் யார்? விரைவில்…

பாதாளக் குழுக்களுடன் தொடர்பில் உள்ள  மற்றும்  தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகளின் பெயர்...

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர்-அதிபர்கள் எதிர்ப்பு!

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை...