Date:

2025 Women’s World Cup – இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு

ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில், இலங்கை மகளிர் அணிக்கு டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 271 ஓட்டங்களை வெற்றி இலக்காக இந்திய மகளிர் அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிய போது மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதன்படி, இந்திய அணி 47 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய மகளிர் அணி சார்பில் டீப்தி ஷர்மா 53 ஓட்டங்களையும் மற்றும் அமன்ஜோத் கவுர் 57 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இனோகா ரணவீர 4 விக்கெட்டுக்களையும் மற்றும் உதேஷிகா பிரபோதினி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, டக்வோர்த் லூயிஸ் முறைபடி, இலங்கை அணிக்கு 271 என்ற ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விசேட பண்ட வரி;கிழங்கு வெங்காயம் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கும் சாத்தியம்

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க...

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

நாட்டில்  சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...

பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனை

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்...

இன்று 2 வது தடவையாகவும் தங்க விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி...